நாட்டை தாய் நாடு என்கிறோம், பேசும் மொழியை தாய் மொழி என்கிறோம். நதிகளுக்கு
பெண்களின் பெயரை சூட்டுகிறோம், மத, பிதா, குரு, தெய்வம் என்பதில் கூட தாயை அதாவது
பெண்களுக்கே முதல் இடம் கொடுக்கிறோம். தாய் பாசத்துக்கு வேறு நிகர் கிடையாது என்ற
கருத்தும் உண்டு. இவ்வாறு நமது தேசத்தில் பலவற்றில் பெண்களே முதல் இடம்
பெற்றுள்ளனர். அவ்வாறே இழிவு, கொடுமைப் படுத்துவதிலும் பெண்களே முதல் இடம்
பெற்றுள்ளனர். முந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு கல்வி தடை, ரவிக்கை அணிய தடை,
உடன் கட்டை ஏற்றுதல், கட்டாய திருமணம் போன்ற பல கொடுமைகள் திணிக்கப்பட்டன,
வழங்கப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் பாலியல் தொல்லைகள், கற்பழிப்புகள் (சிறுமியை
கூட), சினிமாக்களில், பத்திரிகைகளில் கவர்ச்சியா, ஆபாசமாக சித்தரித்தல், தண்ணி
அடித்து வரும் கணவன்மார்களால் தாக்கப்படுதல், காதல் மறுக்கப்பட்ட பெண்களின் மீது
அமிலம் ஊற்றுதல் போன்றவற்றை நாம் அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். போர்
நடைபெறுகிற நாடுகளிலும் பெண்கள் மிகவும் கொடுமை படுத்தப்படுகின்றனர், உதரணமாக நமது
தொப்புள்கொடி உறவுகளான தமிழ் ஈழப் பெண்கள் அடைந்த கொடுமைகளே சாட்சி. பெண்களை
போற்றாத சமுதாயம் சிறந்து விளங்காது என்று சாண்டோர் கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள்
கூறியதை போல் போற்றாத ஒன்றை நான் கவனித்தானால் தான் இக்கட்டுரைக்கு பொது இடங்களில்
தாய்மார்களின் வேதனை என்று தலைப்பு இட்டுள்ளேன்.
சரி விஷியத்திற்கு வருவோம். தாய்
ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பொழுது அவள் அடைகிற வலி வார்த்தைகளால் விவரிக்க இயலாது, இது இயற்கையான வலி. ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த
பின்னர் பொது இடங்ககளான விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்லும்
பொழுது 300, 500 நபர்கள் மத்தியில் குழந்தைக்கு பாலுட்டும் பொழுது அவள் அடைகிற மன
வருத்தம், வேதனை மிக கொடுமையானது. இந்த வலி இயற்கையான வலியல்ல இது சமுகத்தால்
நிகழ்த்தப்பட்ட குற்றமாகும். இப்படி 300, 500 நபர்கள்
மத்தியில் ஒரு தாய் எவ்வாறு குழந்தைக்கு பாலுட்ட முடியும், எவ்வாறு பால் சுரக்கும்,
எவ்வாறு அந்த குழந்தை பசியாறும்? அந்த குழந்தை என்ன குற்றம் புரிந்தது?. இதற்கு
சமுதாயம் என்ன பதில் சொல்லப் போகிறது?.
விமான நிலையங்களில் புகைப் புடிப்பவர்களுக்காக
ஒரு தனி அறை உள்ளது. புகை பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு என்று சொல்லும் அரசு தான்
அதற்கேன்று ஒரு தனி அறை வழங்கியுள்ளது. இவ்வற்றிக்கு தனி அறை வழங்கும் அரசு ஏன் குழந்தைக்கு
பாலுட்டும் அறை வழங்கவில்லை? மனித உரிமை அமைப்புகள் ஏன் இதை அரசின் கவனத்துக்கு
எடுத்துச் செல்லவில்லை? இனி வரும் காலங்களிலாவது அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா?
பெண்களை போற்றி சிறந்த சமுதாயத்தை உருவாக்க அரசு முயற்சி எடுக்குமா?
இக்கட்டுரையை தாய்மார்களுக்கு சமர்பிக்கிறேன்.
மன வேதனையில் இருக்கும் தாய்மார்களின் சார்பாக
சதீஸ் கார்கி.
No comments:
Post a Comment