2015ஆம் ஆண்டு இந்தியாவில் கடும் வெயிலுக்கு 2500 பேர்
உயிரிழந்துள்ளனர், அதிகபட்சமாக ஆந்திராவில் மட்டும் 1735 பேர்
பலியாகியுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் 2015 வரை வெப்பநிலை காரணமாக இந்தியாவில் 20000க்கும்
மேற்பட்ட்றோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடும் வெப்பநிலை காரணமாக நிகழ்ந்த
உயிரிழப்புகளில் 70% உயிரிழப்பு ஆந்திரவில்
பதிவாகியுள்ளது. உலக வரலாற்றில் கடும் வெப்பநிலை காரணமாக உயிரிழந்தோர் பட்டியலில்
இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது, இப்பட்டியலில் அதிகமுறை இடம் பெற்றுள்ள நாடும்
இந்தியா தான், நான்கு முறை அப்பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. ஆனால்
கடும் வெப்பநிலைக் கொண்ட அரபு நாடுகள் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
மாநிலம்/ யூனியன் பிரதேசம்
|
உயிரிழந்தோர் எண்ணிக்கை(2015)
|
ஆந்திரப் பிரதேசம்
|
1735
|
தெலுங்கானா
|
585
|
ஒடிசா
|
35
|
உத்தரப் பிரதேசம்
|
22
|
மேற்கு வங்கம்
|
13
|
குஜராத்
|
10
|
மத்தியப் பிரதேசம்
|
10
|
புது டெல்லி
|
5
|
மகாராஷ்டிரா
|
2
|
ராஜஸ்தான்
|
2
|
சத்தீஸ்கர்
|
1
|
பீகார்
|
1
|
கர்நாடக
|
1
|
மொத்தம்
|
2500
|
உலக
வரலாற்றில் கடும் வெப்பநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை பட்டியல்
|
|||
வரிசை எண்
|
நாடுகள்
|
வருடம்
|
உயிரிழந்தோர்
எண்ணிக்கை
|
1
|
ஐரோப்பா
|
2003
|
71310
|
2
|
ரஷ்யா
|
2010
|
55736
|
3
|
ஐரோப்பா
|
2006
|
3418
|
4
|
இந்தியா
|
1998
|
2541
|
5
|
இந்தியா
|
2015
|
2500
|
6
|
அமெரிக்கா & கனடா
|
1936
|
1693
|
7
|
அமெரிக்கா
|
1980
|
1260
|
8
|
இந்தியா
|
2003
|
1210
|
9
|
இந்தியா
|
2002
|
1030
|
9
|
கிரீஸ் & துருக்கி
|
1987
|
1030
|
கட்டிட தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், வயதானோர், வீட்டு வசதி இல்லாமல் திறந்த வெளியில் வசிப்போர் போன்றவர்களே வெப்பநிலையால் அதிகமாக உயிரிழந்துள்ளனர். குழந்தைகளும், மாற்று திறநாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
கட்டிட தொழிலார்கள் தங்களின் அன்றாடம்
பிழைப்புக்காக, குடும்பத்திற்காக கடும் வெயிலையும் பொருட்படுத்திக்கொண்டு அக்னி
வெயிலில் பணிபுரிகிறார்கள், இத்தகைய வெயில் காலங்களில் கட்டிட தொழிலார்களுக்கு அதன்
நிறுவனம் போதிய ஓய்வு நேரத்தை வழங்குவதில்லை, ஓய்வு நேரத்தை
அதிகப்படுத்துவதும் இல்லை. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போதிய
பாதுகாப்பு வசதிகளை கட்டிட தொழிலார்களுக்கு அதன் நிறுவனம் வழங்குவதில்லை. இதனால்
கட்டிட தொழிலார்கள் தொடர்ந்து அக்னி வெயிலில் பணிபுரிந்து உயிரிழக்கின்றனர், உடல்
நலம் பாதிக்கப்படுகின்றனர்.
வீட்டு வசதி இல்லாமல் திறந்த வெளியில் தங்குபவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாமல் உயிரிழக்கின்றனர். அதிக உயிரிலப்புள்ள ஆந்திராவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அங்கே சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சி நிலவுகிறது, மரங்கள் குறைவாக இருப்பதனால் மக்கள் நிழலில் ஒதுங்கமுடியாமல், தண்ணீரின்றி அக்னி வெயில் தாக்கத்தினால் உயிரிழக்கின்றனர். வெப்பநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அடிப்படை முதலுதவி வழங்கப்படதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மக்களுக்கு வெப்பநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளும் முதலுதவி பற்றி விழிப்புணர்வும் இல்லை, அரசால் முதலுதவி பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கவுமில்லை. ஏழை எழிய மக்கள் தான் பெரும்பாலும் கடும் வெயிலினால் உயிரிழக்கின்றனர். வெயில் காலங்களில் நிலவும் மின்வெட்டும் உயிரிழப்பு ஒருவித காரணமாக அமைகிறது. 20000கும் மேற்பற்றோர் உயிரிழந்தும் மத்திய, மாநில அரசுகள் உயிரிழப்பை கட்டுபடுத்த எவ்வித திட்டத்தையும், நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.
எவ்வாறு
உயிரிழப்பை கட்டுபடுத்தலாம்:
1. எந்த இடங்களில் அதிக உயிரிழப்பு
நிகழ்ந்துள்ளது என்பதை குறித்து ஆய்வை மேற்கொண்டு அந்த இடங்களில் வெயில்
காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தலாம்.
2. விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
வெயில் காலங்களில் எந்த மாதிரியான உணவை உண்ணலாம், எவற்றை உண்ணக்கூடாது, எந்த
மாதிரியான ஆடைகள் அணியலாம், வெயிலினால் ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி,
இதைய துடிப்பு அதிகரித்தல் போன்றவற்றிக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி
நடவடிக்கைகளை குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
3.முதலுதவி குறித்த தகவல்களை
செய்தித்தாள்களில் வெளியுடலாம், குறுஞ்செய்தியை
கைபேசி வழியாக பரப்பலாம், முகநூல் முலமாக பரப்பலாம்,
மேலும் முதலுதவி குறித்த தகவல்கள், செய்முறை புகைப்பட விளக்கங்களை தாளில்
அச்சிட்டு மக்களுக்கு வழங்கலாம், மக்கள் கூடும் பொது இடங்களில் செய்முறை புகைப்பட விளக்கங்கள் கொண்ட பேனரை நிறுவலாம். முதலுதவி குறித்த காணோளிகளை திரையரங்களில் வெயில் காலத்திற்கு முன்பு வெளியுடலாம், whatsapp
மூலமும் காணோளிகளை பரப்பலாம்.
4. தொழிலாளர்கள் உயிரிழப்பை தடுக்க தொழிலாளர்
பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளலாம் அக்னி வெயில் காலங்களில் கட்டிட தொழிலாளர்கள்,
வெளிப்புறத்தில் பணிபுரியும் இதர தொழிற்சாலை தொழிலாளர்கள் மதியம் 12 முதல் 3 மணி வரை
வேலை செய்யக்கூடாது என்ற சட்டத்தை அமல்படுத்தலாம். மேலும் இதனை அதிகாரிகள்
தொழிற்சாலைகளில் சென்று ஆய்வு செய்து உருதிபடுத்திக் கொள்ளலாம்.
5. சாலை ஓரங்களில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல்களை
அதிக எண்ணிக்கையில் அமைத்து மக்களுக்கு விநியோகிக்கலாம்.
6. வீட்டு வசதி இல்லாமல் திறந்த வெளியில்
தங்குபவர்களை குறைந்தபட்சம் வெயில் காலங்களில் அவர்களுக்கு முகாம் அமைத்து அதில்
தங்கவைக்கலாம்.
7. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தி
அதன் முலம் நிலத்தடி நீர் அளவை உயர்த்தி வெயில் காலங்களில் பயன்படுத்தலாம்.
8. மரங்களை அதிக எண்ணிக்கையில் நடலாம் இதன்
மூலம் வருங்காலத்தில் வெப்பத்தை கடுப்படுத்தலாம்.
9.கழிவு நீரை சுத்தகரித்து அதனை வேறு
பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் குடிநீரை வெயில் காலங்களில்
சேமித்துக் கொள்ளலாம்.
10. குளம் குட்டைகளின் ஆழத்தை அதிகப்படுத்தலாம்,இதன் மூலம் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர்
சேமித்து வைக்கலாம், இதன் மூலம் நிலத்தடி நீர் அளவும் உயரும்.
11. ஏழை எழிய மக்களுக்கு குடைகள் தொப்பிகள் போன்றவற்றை குறைந்த விலையில் அல்லது இலவசமாக தரலாம்.
12. செயற்கைக்கோள் மூலம்
இவ்வருடத்தில் அக்னி வெயில் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப
நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பூமியின்
வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனை மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து
அதற்க்கு ஏற்ப உரிய திட்டத்தை வகுத்து, அதனை அமல்படுத்தும் பட்சத்தில் உயிரிழப்பை
கட்டுப்படுத்தலாம், இல்லையென்றால் வரும் காலங்களில் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே
இருக்கும்.
குறிப்பிடல்:
சதீஸ் கார்க்கி,
கோவை