Tuesday, 1 September 2015

“ மது பாட்டில்களால் ஏற்படும் விபத்துக்கள்,உயிரிழப்புகள்.....”

மது அருந்தினால் விட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. மதுவிலக்குப் போராட்டம் மிகத் தீவிரமாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப் புரட்சிகரமான போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இக்கட்டுரையை எழுதி உள்ளேன். எனினும் இக்கட்டுரை மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து எழுதப்பட்டதல்ல, மாறாக மது பாட்டில்களால் ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகள் குறித்து இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. மதுவினால் மட்டும் விட்டிற்கும் நாட்டிற்கும் கேடு அல்ல, மது பாட்டில்களாலும் கேடு என்பதை விளக்கவே இக்கட்டுரையை எழுதி உள்ளேன்.

பொதுவாக மது அருந்துபவர்கள் பெரும்பாலும் பாரில்,டாஸ்மாக்கில், விடுதியில், மறைவான இடங்களில், லாட்ஜில், நண்பர்கள் தங்கும் அறையில், போன்ற இடங்களில் தான் மது அருந்துவார்கள். ஆனால் இப்பொழுது புதிதாக மது அருந்துவதற்கு என்றே ஒரு நாள் சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டார்கள். இயற்கையை ரசித்தவாரே, தண்ணீரில் நினைந்தவரே, தண்ணீரில் மிதந்துக் கொண்டே மது அருந்த வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். இத்தகைய ஆசையை தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்கையில் அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள இயலாது. எனவே தங்களது ஆண் வட்ட நண்பர்களோடு, தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாள் சுற்றுலாவாக தங்களது இருப்பிடத்திற்கு அருகமையில் இருக்கும் ஏற்காடு, பொள்ளாச்சி டாப் ஸ்லிப், வால்பாறை,பைக்காரா, முதுமலை, கொடைக்கானல் போன்ற பசுமை நிறைந்த வனப்பகுதிக்குச் செல்கிறார்கள். பசுமை நிறைந்த வனப்பகுதிக்கு உள்ளே சென்று மது அருந்திவிட்டு, பீர் பாட்டில்களை உடைத்துவிடுகிறார்கள் அல்லது பிற இடங்களில் எரிந்து விடுகிறார்கள். இத்தகைய பாதைகளில் கிடக்கும் உடைக்கப்பட்ட மது பாட்டில்களில் மேல் யானை கால் வைத்தால் உடைக்கப்பட்ட மது பாட்டில்களின் பகுதி அதன் பாதங்களுக்குள் முழுக்கப் புகுந்துவிடும். மேலும் யானை சிறிது சென்றால், பாட்டிலின் பாகங்கள் நன்றாக கால்களுக்கு உள்ளே செல்லும். சில தினங்களுக்கு பிறகு யானையின் கால்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் பாதங்களுக்கு உள்ளே நுழையும், மேலும் புழுக்கள் சதையைத் துளைத்து, சீழை உள்ளே கொண்டு செல்லும், யானையின் கால்கள் பெரிதாக வீக்கம் அடையும், யானை நடக்க முடியாமல்,உணவு, தண்ணீர் அருந்தாமல் பல நாட்கள் தவித்து, அதே இடத்தில் யானை இறக்கும். இவ்வாறு யானைகள் தொடர்ந்து இறந்தால் காடுகளின் வளம் பாதிக்கப்படும். காடுகளின் வளம் பாதிக்கப்பட்டால் சுற்றுச்சுழல் மாசுடைதல், வெப்பநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. யானைகள் காட்டில் இருந்தால் மட்டுமே அக்காடு வளம் நிறைந்த காடகக் கருதப்படும். யானைகளை போலவே காட்டில் வாழும் காட்டு எருமைகள், மான்கள் போன்ற விலங்குகளும் மது பாட்டில்களால் பாதிக்கப்படுகின்றன.


குளம், குட்டை, வாய்கால் போன்ற பகுதிகளில் மது அருந்துபவர்கள், அதன் கரைகளிலே மது பாட்டில்களை உடைத்துவிடுகிறார்கள். அவ்வாறு உடைக்கப்பட்ட பாட்டிலின் பகுதிகள் அதன் கரைகளில் இருக்கும் சேற்றில் சிக்கிக் கொள்கின்றன. அத்தகைய பகுதிகளில் செல்வோர் தவறுதலாக  சேற்றில் கால் வைக்கும் பொழுது, அங்கு உடைக்கப்பட்ட பாட்டிலின் பகுதிகள் அவர்களின் கால்களை பதம்பார்க்கின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

இதனை போன்றே அருவிகளில் மது அருந்திவிட்டு பாறைகளில் மது பாட்டிலை வீசி உடைக்கிறார்கள். அவ்வாறு உடைக்கப்பட்ட மது பாட்டிலின்  கூர்மையான பகுதிகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு, அங்கு குளிப்பவர்களின் தோல்களில் காயம் ஏற்படுத்துகின்றன. சில சமையங்களில் முழு பாட்டில்கள் தண்ணீரால் இழுத்து வரப்பட்டு, அருவிகளில்  மேலிருந்து கிழே குளிப்பவர்களின் தலையில் விழுந்து உடைகிறது. இதனால் மக்கள் காயம் அடைகிறார்கள்.

பேருந்துகளில் சுற்றுலா செல்லும் ஆண்கள் பேருந்துகளிலே மது அருந்திவிட்டு, பேருந்து செல்லும் பொழுது, மது பாட்டிலை வேகமாக சாலையில் எறிகிறார்கள். அவ்வாறு எறியப்பட்ட பாட்டில் ரோட்டில் உடையப்பட்டு ‘டமார்’ என்று ஓசை எழுகிறது. மேலும் அவ்வோசை எழும் பொழுது அனைவரும் திரும்பிப் பார்க்கும்பொழுது, தான் செய்த காரியம் அனைவரின் கவனத்தை ஈர்த்து விட்டதாகவும், தான் ஒரு மாஸ், கெத்து என்று தங்களுக்குள் ஒரு கர்வம், தோற்றம் ஏற்படுத்துக் கொள்கின்றனர். அவ்வாறு சாலையில் உடைக்கப்பட்ட பாட்டில்களால் பல வாகனங்களின் டயர் பஞ்சர் ஆகி விபத்துகள் நிகழ்கின்றன. சிலச் சயமங்களில் இவ்விபத்து உயிரிழப்பில் முடிகிறது.

சாலை ஓரங்களில் வாகனத்தில் அமர்ந்து மது அருந்துபவர்கள், மது பாட்டில்களை குப்பை தொட்டியில் அல்லது அதன் பக்கத்தில் வீசி உடைக்கிறார்கள். மேலும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை கையில் அல்லும்பொழுது உடைக்கப்பட்ட பாட்டில்களின் மூலம் காயம் அடைகிறார்கள்.    

மனிதன் தான் அடையும் சில மணி நேர போதைக்கும், இன்பத்துக்கும் வன விலங்குகளை அழிக்கிறான், காட்டின் வளத்தை அழிக்கிறான், சக மனிதனுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துகிறான். எனவே மது பாட்டில்களாலும் நாட்டிற்கு கேடு. மது விலக்கை அமல்படுத்துவோம், இதன் மூலம் மது பாட்டில்களால் மது அருந்துவோர் ஏற்படுத்தும்  தீமை கட்டுப்படுத்துப்படும்.  

குறிப்பிடல்:
1.http://www.albanytamilsangam.org/vishvesh/ED_2.htm                

சதீஸ் கார்க்கி

கோவை             

Saturday, 27 June 2015

வெயிலும் உயிரிழப்பும்

2015ஆம் ஆண்டு இந்தியாவில் கடும் வெயிலுக்கு 2500 பேர் உயிரிழந்துள்ளனர், அதிகபட்சமாக ஆந்திராவில் மட்டும் 1735 பேர் பலியாகியுள்ளனர். 1990ஆம் ஆண்டு முதல் 2015 வரை வெப்பநிலை காரணமாக இந்தியாவில் 20000க்கும் மேற்பட்ட்றோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடும் வெப்பநிலை காரணமாக நிகழ்ந்த உயிரிழப்புகளில் 70%  உயிரிழப்பு ஆந்திரவில் பதிவாகியுள்ளது. உலக வரலாற்றில் கடும் வெப்பநிலை காரணமாக உயிரிழந்தோர் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது, இப்பட்டியலில் அதிகமுறை இடம் பெற்றுள்ள நாடும் இந்தியா தான், நான்கு முறை அப்பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. ஆனால் கடும் வெப்பநிலைக் கொண்ட அரபு நாடுகள் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலம்/ யூனியன் பிரதேசம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை(2015)
ஆந்திரப் பிரதேசம்
1735
தெலுங்கானா
585
ஒடிசா
35
உத்தரப் பிரதேசம்
22
மேற்கு வங்கம்
13
குஜராத்
10
மத்தியப் பிரதேசம்
10
புது டெல்லி
5
மகாராஷ்டிரா
2
ராஜஸ்தான்
2
சத்தீஸ்கர்
1
பீகார்
1
கர்நாடக
1
மொத்தம்
2500

உலக வரலாற்றில் கடும் வெப்பநிலை காரணமாக  உயிரிழந்தோர் எண்ணிக்கை பட்டியல்
வரிசை எண்
நாடுகள்
வருடம்
உயிரிழந்தோர் எண்ணிக்கை
1
ஐரோப்பா
2003
71310
2
ரஷ்யா
2010
55736
3
ஐரோப்பா
2006
3418
4
இந்தியா
1998
2541
5
இந்தியா
2015
2500
6
அமெரிக்கா & கனடா
1936
1693
7
அமெரிக்கா
1980
1260
8
இந்தியா
2003
1210
9
இந்தியா
2002
1030
9
கிரீஸ் & துருக்கி
1987
1030














கட்டிட தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், வயதானோர், வீட்டு வசதி இல்லாமல் திறந்த வெளியில் வசிப்போர் போன்றவர்களே வெப்பநிலையால்  அதிகமாக உயிரிழந்துள்ளனர். குழந்தைகளும், மாற்று திறநாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்

கட்டிட தொழிலார்கள் தங்களின் அன்றாடம் பிழைப்புக்காக, குடும்பத்திற்காக கடும் வெயிலையும் பொருட்படுத்திக்கொண்டு அக்னி வெயிலில் பணிபுரிகிறார்கள், இத்தகைய வெயில் காலங்களில் கட்டிட தொழிலார்களுக்கு அதன் நிறுவனம் போதிய ஓய்வு நேரத்தை  வழங்குவதில்லை, ஓய்வு நேரத்தை அதிகப்படுத்துவதும் இல்லை. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போதிய பாதுகாப்பு வசதிகளை கட்டிட தொழிலார்களுக்கு அதன் நிறுவனம் வழங்குவதில்லை. இதனால் கட்டிட தொழிலார்கள் தொடர்ந்து அக்னி வெயிலில் பணிபுரிந்து உயிரிழக்கின்றனர், உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். 

வீட்டு வசதி இல்லாமல் திறந்த வெளியில் தங்குபவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாமல் உயிரிழக்கின்றனர். அதிக உயிரிலப்புள்ள ஆந்திராவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அங்கே சில பகுதிகளில்  தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சி நிலவுகிறது, மரங்கள் குறைவாக இருப்பதனால் மக்கள் நிழலில் ஒதுங்கமுடியாமல், தண்ணீரின்றி  அக்னி வெயில் தாக்கத்தினால் உயிரிழக்கின்றனர். வெப்பநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அடிப்படை முதலுதவி  வழங்கப்படதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மக்களுக்கு வெப்பநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளும் முதலுதவி பற்றி விழிப்புணர்வும் இல்லை, அரசால் முதலுதவி பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கவுமில்லை. ஏழை எழிய மக்கள் தான் பெரும்பாலும் கடும் வெயிலினால் உயிரிழக்கின்றனர். வெயில் காலங்களில் நிலவும் மின்வெட்டும் உயிரிழப்பு ஒருவித காரணமாக அமைகிறது.  20000கும் மேற்பற்றோர் உயிரிழந்தும் மத்திய, மாநில அரசுகள் உயிரிழப்பை கட்டுபடுத்த எவ்வித திட்டத்தையும், நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.

எவ்வாறு உயிரிழப்பை கட்டுபடுத்தலாம்:   
1. எந்த இடங்களில் அதிக உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பதை குறித்து ஆய்வை மேற்கொண்டு அந்த இடங்களில் வெயில் காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தலாம்.
2. விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம். வெயில் காலங்களில் எந்த மாதிரியான உணவை உண்ணலாம், எவற்றை உண்ணக்கூடாது, எந்த மாதிரியான ஆடைகள் அணியலாம், வெயிலினால் ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி, இதைய துடிப்பு அதிகரித்தல் போன்றவற்றிக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகளை குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
3.முதலுதவி குறித்த தகவல்களை செய்தித்தாள்களில் வெளியுடலாம், குறுஞ்செய்தியை கைபேசி வழியாக பரப்பலாம், முகநூல் முலமாக பரப்பலாம், மேலும் முதலுதவி குறித்த தகவல்கள், செய்முறை புகைப்பட விளக்கங்களை தாளில் அச்சிட்டு மக்களுக்கு வழங்கலாம், மக்கள் கூடும் பொது இடங்களில் செய்முறை புகைப்பட விளக்கங்கள் கொண்ட பேனரை நிறுவலாம். முதலுதவி குறித்த காணோளிகளை  திரையரங்களில் வெயில் காலத்திற்கு முன்பு வெளியுடலாம், whatsapp மூலமும் காணோளிகளை பரப்பலாம்.
4. தொழிலாளர்கள் உயிரிழப்பை தடுக்க தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளலாம் அக்னி வெயில் காலங்களில் கட்டிட தொழிலாளர்கள், வெளிப்புறத்தில் பணிபுரியும் இதர தொழிற்சாலை தொழிலாளர்கள் மதியம் 12 முதல் 3 மணி வரை வேலை செய்யக்கூடாது என்ற சட்டத்தை அமல்படுத்தலாம். மேலும் இதனை அதிகாரிகள் தொழிற்சாலைகளில் சென்று ஆய்வு செய்து உருதிபடுத்திக் கொள்ளலாம்.
5. சாலை ஓரங்களில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல்களை அதிக எண்ணிக்கையில் அமைத்து மக்களுக்கு விநியோகிக்கலாம்.
6. வீட்டு வசதி இல்லாமல் திறந்த வெளியில் தங்குபவர்களை குறைந்தபட்சம் வெயில் காலங்களில் அவர்களுக்கு முகாம் அமைத்து அதில் தங்கவைக்கலாம்.
7. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தி அதன் முலம் நிலத்தடி நீர் அளவை உயர்த்தி வெயில் காலங்களில் பயன்படுத்தலாம்.
8. மரங்களை அதிக எண்ணிக்கையில் நடலாம் இதன் மூலம் வருங்காலத்தில் வெப்பத்தை கடுப்படுத்தலாம்.
9.கழிவு நீரை சுத்தகரித்து அதனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் குடிநீரை வெயில் காலங்களில் சேமித்துக் கொள்ளலாம்.
10. குளம் குட்டைகளின் ஆழத்தை அதிகப்படுத்தலாம்,இதன் மூலம் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்கலாம், இதன் மூலம் நிலத்தடி நீர் அளவும் உயரும்.
11. ஏழை எழிய மக்களுக்கு குடைகள் தொப்பிகள் போன்றவற்றை குறைந்த விலையில் அல்லது இலவசமாக தரலாம்.
12. செயற்கைக்கோள் மூலம் இவ்வருடத்தில் அக்னி வெயில் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனை மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து அதற்க்கு ஏற்ப உரிய திட்டத்தை வகுத்து, அதனை அமல்படுத்தும் பட்சத்தில் உயிரிழப்பை கட்டுப்படுத்தலாம், இல்லையென்றால் வரும் காலங்களில் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கும்.  

குறிப்பிடல்:



சதீஸ் கார்க்கி,
கோவை  



Thursday, 16 April 2015

வேண்டும் பாலூட்டும் அறை

விமலா விழித்துக்கொள் மணி 7 ஆச்சு, காலை உணவு தயாராகிவிட்டது, மேஜையில் காபி வைத்துள்ளேன், முகத்தை கழுவிக்கொண்டு வா. விமலா புதிய இசை மெட்டுடன் கொட்டாவி விட்டு கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தாள், பல் விளக்கி விட்டு வந்தவுடனே இன்று மாலை எத்தனை மணிக்கு வருவிங்க? என்று விசாரித்தாள். நான் மாலை 6 மணிக்குள் வந்து விடுவேன் நீ அதற்குள் துணிக்கு இஸ்த்திரி போட்டு பையில் வைத்துவிடு, குழந்தையை குளிப்பாட்டி தயாராக இரு அப்பதான் நாம் ரயில் நிலையத்திற்கு சிக்கிரம் போக முடியும், தாமதமாக கிளம்பினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொள்வோம். சரிங்க நான் மாலை நீங்கள் வருவதற்குள் தயாராக இருப்பேன் என்றாள்.
பிறகு இருவரும் காபி அருந்தி கொண்டிருந்தோம், அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்டது, யார்? என்று பார்பதற்காக விமலா சென்றாள், நம்ம ஜீவா தான் வந்துருப்பான் என்றேன், விமலா கதவை திறந்தால் ஜீவா செல்போனில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான். வாங்க அண்ணே என்று விமலா அழைத்தாள், செல்போனில் பேசிக்கொண்டே வந்து சோபாவில் அமர்தான் ஜீவா.
செல்போனில் பேசிமுடித்துவிட்டு பிறகு ரமேஷ் இன்னைக்கு கோயம்புத்தூர் போறதா சொன்ன? என்று கேட்டான்
ஆமாம் டா ஜீவா இன்னைக்கு சாயங்காலம் வந்தவுடனே கிளம்பவேண்டும்

சரி காபி சாப்பிடு ஜீவா, விமலா காபி கொடுத்தாள், மூவரும் அருந்தினோம், ஜீவா சிறிதளவு காபி குடித்துவிட்டு அண்ணி நீங்களா காபி வைத்தீர்கள்? என்று கேட்டான், இல்லை உங்கள் நண்பர் தான் வைத்தார் என்றாள் விமலா
ரமேஷ் நிஜமாவே நீ தான் வச்சியா?
ஏன்டா என்ன சந்தேகம் ?
நம்ம கார்த்திக் பேக்கரி காபி டேஸ்ட் மாதிரி தெரிஞ்சுது அதன் கேட்டேன்
கார்த்திக் பேக்கரி கடைல காபி வாங்கினா அந்த டேஸ்ட் தான் இருக்கும் என்றேன்

ஜீவா விமலாவை பார்த்து என்னங்க ரமேஷ் தான்  காபி வைத்தார் என்று சொன்னிங்க? ஆமாம் அவர் தான் கடைக்கு போய் காபி வாங்கி வைத்தார், (சிரித்துக் கொண்டே) அதனாலே தான் உங்கள் நண்பர் காபி வைத்தார் என்று சொன்னேன்  
ஜீவா அரை சதவிதம் சிரித்துக்கொண்டு ரமேஷ் உன்னை போலவே அண்ணியும் காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்  என்றான்.
ஆமாம் டா ஜீவா இன்னைக்கு பால்காரன் வரல அதனால் தான் இன்று பேக்கரி காபி இல்லையென்றால் பில்ட்டர் காபி.
ஜீவா காபி குடித்துவிட்டு எங்கடா உன் பையன் சரவனணன் துங்கிட்டு இருக்கனா? என்று கேட்டான்
ஆமாண்டா ஜீவா
ரமேஷ் உன் பையனுக்கு வயசு பத்து மாசம் இருக்குமா ?
ஒன்பது மாசம் ஆச்சு ஜீவா.
ஜீவா ஆபீசுக்கு நேரம் ஆச்சு கிளம்புவோம் என்றேன்.
சரி விமலா புறப்படுகிறோம் மாலை 6 மணிக்கு தயாராக இரு
அண்ணி புறப்படுகிறேன் என்றான் ஜீவா   
ஸ்டாண்டை எடுத்துவிட்டு பைக்கில் அமர்ந்தேன் அப்பொழுது ஜீவா என்னிடம் கையில் 500 ரூபாய் இருக்கிறதா என்று கேட்டான். 300 ரூபாய் தான் இப்போ இருக்கு ஏன்டா ஜீவா?
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் மறந்திட்டியா? என்றான் ஜீவா, நல்ல வேலை ஞாபகப்படுத்தினாய், பிறகு ஹெல்மெட் அணிந்து கொண்டு  இருவரும் கிளம்பினோம்.

தாம்பரம் சிக்னலில் நின்றோம். ரமேஷ் இன்னைக்கு நீதானே சமையல்? என்று கேட்டான் ஜீவா.

ஆமாம் எப்படி தெரியும், ரமேஷ் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை நீதானே சமைப்பாய், இன்று வெள்ளிக்கிழமை தானே அதான் கேட்டேன்.
ஆமாண்டா ஜீவா பாவம் விமலா கைக்குழந்தையை வைத்துக்கொண்டு சமையல் வேலை, வீட்டு வேலை கவனித்துக்கொள்கிறாள், வாரத்திற்கு இரண்டு நாள் நான் சமையல் செய்வேன், ஞாயிற்றுக்கிழமை இருவரும் சேர்ந்து சமைப்போம், இதனால் விமலாவுக்கு கொஞ்சம் சுமை குறையும்.
நல்லது. கோயம்புத்தூர் போய்விட்டு எப்போ வருவே ரமேஷ் ?
ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு வந்துவிடுவோம். பச்சை விளக்கு எரிவதற்குள் பின் வரிசை வாகனத்தில் இருந்தவர்கள் ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தனர், நான் சற்றே நின்று பச்சை விளக்கு எறிந்த பின்னரே சென்றேன்.

வேலை முடிந்த பிறகு ஜீவாவை வீட்டில் விட்டுவிட்டு, 5.45 மணிக்கு வீட்டிற்கு சென்றேன், விமலா அப்பொழுது குழந்தைக்கு உடை அனிவித்துக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் கிளம்பினோம், கால் டாக்ஸி மூலம் ரயில் நிலையத்திற்கு சென்றோம்.
கோயம்புத்தூர் செல்லும் ரயிலுக்காக பிளாட்போரம் ஓரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தோம், கோயம்புத்தூர் செல்லும் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக வந்துகொண்டிருப்பதாக அறிவிப்பு வந்தது, குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது, குழந்தைக்கு பசிக்கிறது பாலூட்டவேண்டும் என்றால் விமலா. அப்பொழுது ஆபீஸ் எண்ணிலிருந்து கால் வந்தது, நான் போனை எடுத்து ஹெலோ என்றேன் எதிர்த்தரப்பிலிருந்து குரல் ஏதும் கேட்கவில்லை, பிறகு நான் ஆபீஸ் எண்ணிற்க்கு அழைத்தேன் அழைப்பு செல்லவில்லை, போனில் டவர் சிக்னல் எதுவுமில்லாமல் இருந்தது, இதுவரை மாலை நேரத்தில் ஆபீசிலிருந்து கால் வந்ததில்லை, மேனேஜர் வந்திருப்பாரோ என்று யோசித்தேன், இந்த நேரம் பார்த்து போனில் டவர் சிக்னல் எதுவும்மில்லாமல் இருக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்து விமலா போனிலிருந்து அழைக்கலாம் என்று வாங்கியபோது அவளுடைய போனிலும் டவர் சிக்னல் எதுவுமில்லாமல் இருந்தது. பிறகு விமலாவிடம் நான் கடைக்குச் சென்று தொலைபேசியில் பேசிவிட்டு வருகிறேன் நீ இங்கேயே இரு என்று கூறிவிட்டு கடையை தேடி நடக்க ஆரம்பித்தேன்.   

விமலா குழந்தையின் பசியை போக்க பாலூடிக் கொண்டிருந்தாள், குழந்தை பால் குடித்துக் கொண்டே ஒரு கையால் விமலாவின் கன்னத்தை தட்டிக் கொண்டிருந்தது, அவ்வாறு குழந்தை கன்னத்தை தட்டிக் கொண்டு, சிரித்துக்கொண்டு விமலாவை பார்த்தது, விமலா மகிழ்ச்சி அடைந்தாள், விமலா மழலையின் சிரிப்பையும், அதன் அழகையும் ரசித்துக்கொண்டே பாலூட்டிக் கொண்டிருந்தால், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விமலா கணவனின் வருகைக்காக சுற்றி பார்த்தாள் தென்படவில்லை, மறுமுறை சுற்றி பார்த்தபொழுது 4 வாலிபர்கள் அவள் பாலூட்டிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதை கவனித்த விமலா அதிர்ச்சி அடைந்தாள், இத்தகைய நிலையில் பாலூட்ட தயங்கினாள் விமலா. வாலிபர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள், இதனால் விமலா மிகுந்த வேதனை அடைந்தாள், இப்படி வாலிபர்கள் பார்த்துக் கொண்டிருக்க குழந்தைக்கு பாலூட்ட சிரமப்பட்டால், ஏன்? இங்கு வந்தோம் என்று மனதுக்குள் குமரினாள், இதனை தவிர்க்க வேறு வழியின்றி பாலூட்டுவதை தவிர்த்து குழந்தையை விலக்க முயற்சித்தாள், அப்பொழுது குழந்தை அழ ஆரம்பித்தது, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள் விமலா.

 பிறகு புடவையை நன்கு இழுத்துவிட்டு பாலூட்ட ஆரம்பித்தாள் விமலா, கணவனை தேடி மீண்டும் சுற்றி பார்த்தாள் அப்பொழுது அந்த 4 வாலிபர்களில் ஒருவன் செல்போனை சாய்வாக படம் பிடிப்பதுபோல் பிடித்துக் கொண்டிருந்தான், விமலா பார்ப்பதை உணர்ந்த வாலிபன் பட்டென்று செல்போனை மறைத்து வைத்தான், தான் பாலுட்டுவதை படம் பிடித்துவிட்டார்கள் என்று உணர்ந்த விமலா ரௌதிரத்துடன் எழுந்து வாலிபர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், இதை கண்ட வாலிபர்கள் ஓட்டம் பிடித்தார்கள், விமலா மேலும் நடக்க குழந்தை அழ ஆரம்பித்தது வேறு வழியின்றி குழந்தையோடு இருக்கையில் அமர்ந்தாள்.
இச்சம்பவத்தை யாரும் பார்த்ததாக தெரியவில்லை. நான் அலுவலகத்தில் மேனேஜர் உடன் பேசிவிட்டு திரும்பி வந்தபொழுது குழந்தையும், விமலாவும் அழுது கொண்டிருந்தனர். நான் அதிர்ச்சி அடைந்தேன், என்ன நடந்தது? ஏன் அழுகிறார்கள்? என்று அறியாமல் தவித்தேன். விமலா அருகில் அமர்ந்து, அவளை பார்த்து  என்ன ஆச்சு? ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன்.

விமலா பேச முடியாமல் துடித்தாள், எனது வலது கை தோளில் சாய்ந்து அழுதாள், அவளது கண்ணீர் துளிகள் எனது தோள் பகுதி சட்டையை ஈரம் ஆக்கியது. விமலாவை கவனிப்பதா? அல்லது குழந்தையை கவனிப்பதா? இருவருமே அழுகின்றனர், யாரை முதலில் கவனிப்பது என்று தெரியாமல் தவித்தேன். பிறகு விமலாவிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு சிறிது நேரம் தாலாட்டி, பேனாவை கொடுத்தேன், பேனாவை கையில் கேட்டியாக பிடித்துக் கொண்ட குழந்தை அழுகையை நிறுத்தியது.
மீண்டும் விமலாவிடம் என்ன நடந்தது? ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன், அவள் எனது தோளில் சாய்ந்தபடியே விம்மிக்கொண்டு நடந்ததை சொல்லத் தொடங்கினாள், அவள் சொல்ல சொல்ல மனதில் துக்கமும், கோவமும் அதிகரித்தது. நடந்தவற்றை சொல்லி முடித்தும் விமலாவிற்கு அழுகை நிற்கவில்லை, எனது தோள் சட்டை பகுதி முழுவதும் அவளது கண்ணீரினால் ஈரம் அடைத்தது, எனது கண்களிலும் நீர் வடிந்தது. அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது, நான் தொலைபேசியில் பேசி முடித்து விட்டு வெளியே வந்தபொழுது நான்கு வாலிபர்கள் ஒரு வித பதட்டத்துடன் வேகமாக என்னை கடந்து சென்றனர், விமலா கூறிய வாலிபர்கள் அவர்களாக இருக்குமோ என்று யோசித்தேன். விமலாவோ அழுது கொண்டே இருந்தாள், இச்சம்பவத்தை பற்றி மேலும் பேசினால் விமலா அழுது கொண்டே இருப்பாள், எனவே இச்சம்பவத்தை பற்றி பேச வேண்டாம் என்று எண்ணினேன்.
பிறகு விமலாவை சமாதனம் செய்து கொண்டிருக்கும் பொழுது கோயம்புத்தூர் செல்லும் ரயில் பிளாட்போரத்தை வந்தடைந்தது. நான் குழந்தையை எடுத்துக்கொண்டு விமலாவுடன் ரயிலை நோக்கி நடந்தேன், ஆனால் மனதில் பெரும் வேதனையை சுமந்து கொண்டு நடக்க முடியாமல் திணறினேன். ரயில் அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பது போல் தோன்றியது, ஒரு வழியாக துயரத்தோடு ரயிலில் ஏரி இருக்கையில் அமர்தோம்.

இதுவரை நான் விமலாவை அழவிட்டதும் இல்லை, அழுது பார்த்ததும் இல்லை, ஆனால் தொலைபேசியில் பத்து நிமிடம் பேசிவிட்டு வருவதற்குள் இவ்வாறு நடந்துவிட்டதே என்று மனம் துயரமடைந்தது, மேலும் அவள் அழுகைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?, இதற்கு பதில் உண்டா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது விமலா ஏங்க நாம் கோயம்புத்தூர்க்கு செல்ல வேண்டாம், வீட்டிற்கு செல்வோம் என்றாள், நான் ஏன் என்று கேட்டேன்?. கோயம்புத்தூர்க்கு சென்றால் என்னுடைய அம்மா என்னை பார்த்து எப்படி இருக்கிறாய்? என்று நலம் விசாரிக்கும்பொழுது என்னால் பதிலளிக்க இயலாது என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

ரயில் இன்னும் பிளாட்போரத்தில் நின்று கொன்றிருந்தது, நான் சிறிது யோசித்தேன், விமலா அவளது அம்மாவிடம் இச்சம்பவத்தை கூறினால் அவர்கள் மிகவும் வேதனை படுவார்கள், ஏற்கனவே அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை, இந்த நிலைமையில் அங்கு செல்வது சரியாக இருக்காது என்று முடிவுசெய்து விமலா கூறியது போலவே ரயிலிருந்து கிழே இறங்கி கால் டாக்ஸி பிடித்து விட்டிற்கு சென்றோம், வரும் வழியில் விமலாவின் அம்மாவிற்கு செல்போனில் அழைத்து உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூர்க்கு வர இயலவில்லை என்று கூறிவிட்டேன்.

அன்று இரவு மிக நிளமாக இருந்தது, உறக்கமின்றி படுக்கையில் படுத்து யோசித்துக் கொண்டிருந்தேன். நேரம் மிக மெதுவாகச் சென்றது, விமலா சினிங்கிக் கொண்டே படுத்திருந்தாள், அவள் முழுமையாக உறங்கியதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வழியாக பொழுது விடிந்தது, நான் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் செய்து விட்டு, குளிக்கச் சென்றேன்.
பிறகு விமலாவை எழுந்திரிக்கச் சொல்ல தொட்ட பொழுது உடல் வெப்பமாக இருந்தது, காய்ச்சலாக இருக்குமோ என்று எண்ணி எழுப்பினேன், அவளது கண்கள் வீக்கம் அடைந்து சிவப்பாக இருந்தது. அவள் சோர்வாக இருந்தாள், நான் சென்று ஆட்டோவை பிடித்து விமலாவை அழைத்துக் கொண்டு மருத்தவமனைக்கு சென்றேன். பிறகு டாக்டர் விமலாவை கேள்வி கேட்டுக் கொண்டே சிகிச்சை மேற்கொண்டார், இடையே என்னையும் கவனித்தார், மருந்து குறிப்புகளை கொடுத்து விமலாவை வெளியே இருக்குமாறு கூறினார். பின்னர் என்னிடம் உங்களுக்குள் சண்டையா? என கேட்டார், நான் இல்லை என்றேன். உங்களது மனைவியின் காய்ச்சலுக்கு காரணம் உடல் நலக் குறைவு மட்டும் அல்ல மனநலக் குறைவும் தான், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது மனதை தேற்றுங்கள் என்றார் டாக்டர். பிறகு மருந்துகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினோம்.   
அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது மனதை தேற்றுங்கள் என்று டாக்டர் கூறியது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. மனம் மிகவும் தடுமாறியது, அப்பொழுது ஜீவாவின் ஞாபகம் வந்தது அவன் நல்ல சிந்தனையாளன், மனத் தெளிவு உடையவன் அவனிடம் இச்சம்பவத்தை தெரிவித்து ஒரு தீர்வு காண வேண்டும் என்று எண்ணி செல்போனில் ஜீவாவை அழைத்து முக்கியமான விஷயம் எப்பொழுது வருகிறாய் என்று ஒரு வித பதட்டத்துடன் கேட்டேன், 20 நிமிடத்தில் வருகிறேன் என்றான் ஜீவா.

ஜீவா வந்தான், அவனை அழைத்து கொண்டு மாடிக்குச் சென்றேன். நடந்தவற்றை கூறினேன், இது மட்டும்மில்ல ஜீவா இப்போ விமலாவுக்கு காய்ச்சல் டாக்டரிடம் சென்றோம், அவர் உங்களது மனைவியின் காய்ச்சலுக்கு காரணம் உடல் நலக் குறைவு மட்டும் அல்ல மனநலக் குறைவும் தான், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது மனதை தேற்றுங்கள் என்றார். மனசு தடுமாறி குழப்பமாக இருக்கு ஜீவா என்னடா செய்யலாம்?

ரமேஷ் நீ சொல்வதை பார்த்தல் உன் மனைவிக்கு தான் பாலூட்டுவதை அந்த வாலிபர்கள் படம் பிடித்து இணையதளத்தில் விட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் கலந்த பயம் வந்துருக்கிறது. ஜீவா எப்பிடியாவது இந்த பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டுவரணும் என்ன செய்யலாம்?, இதை எப்படி தடுப்பது? என்று ஜீவாவை கேட்டேன்.

ரமேஷ் உன் மனைவிக்கு ஏற்பட்டது போல் பல பெண்களுக்கும் இப்பிரச்சனை ஏற்படுகிறது ஆனால் யாரும் இதை தட்டிக் கேட்பதில்லை, நான் சென்ற வருடம் பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்தபொழுது விமலாவை போல அங்கே ஒரு பெண் தன் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள், அதை அங்கிருந்த பல வாலிபர்கள் பார்த்தனர், அப்பெண் மிகுந்த வேதனை அடைந்தாள், இதனை போன்றே பேருந்து நிலையம் முதலிய பொது இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது என்றான் ஜீவா.
அப்போ இதற்கு தீர்வே இல்லையா? ஜீவா. தீர்வு என்பது அனைத்து பெண்களுக்காக இருக்க வேண்டும் அதான் யோசிக்கிறேன். ஒரு தீர்வு இருக்கிறது ரமேஷ் என்ன தீர்வு? ஜீவா, விமான நிலையத்தில் பல ஆண்கள் புகைப் பிடிக்கிறார்கள் என்பதற்காக புகைப் பிடிப்பதற்கு என்றே தனி அறை இருக்கிறது. இதனை போன்றே பெண்களுக்கும் பாலூட்டுவதற்க்கு வசதியாக அணைத்து பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம், தியேட்டர் முதலிய பொது மக்கள் கூடும் இடங்களில் பாலூட்டும் அறை அமைத்தால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும் என்றான். ஆம் ஜீவா இது தான் சரியான தீர்வாக இருக்கும்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்றான் ஜீவா, என்ன சிக்கல் 
இருக்கும் ஜீவா என்று கேட்டேன். இப்பிரச்சனை பற்றி நாம் மட்டும் பேசினால் தீர்வு கிடைக்காது, மக்கள் இப்பிரச்சனை எழுப்பினால் மட்டுமே அனைத்து பொது இடங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்படும். ஆனால் எப்படி மக்கள் மத்தியில் இப்பிரச்சனையை கொண்டு செல்வது என்று யோசிக்கிறேன் என்றான் ஜீவா.

ஜீவா இதற்க்கு என்னிடம் ஒரு தீர்வு இருக்கிறது என்றேன், என்ன தீர்வு? ரமேஷ் சொல்லு. ஜீவா எனக்கு நன்றாக கதை எழுத வரும் என்பது உனக்கு தெரியும், இப்பிரச்சனை குறித்து ஒரு கதை எழுதி அதை பத்திரிக்கையில் வெளியிட்டால் நிச்சயம் மக்கள் அதனை படிப்பார்கள், அதன் மூலம் மக்களுக்கு இப்பிரச்சனை குறித்து விழிப்புனர்வு ஏற்படும். பிறகு முடிவு மக்கள் கையில்.

சரியான தீர்வு என்றான் ஜீவா. ரமேஷ் எனக்கு தெரிந்த ஒரு பத்திரிக்கை ஆசிரியர் இருக்கிறார் நீ எழுதும் கதை அவரிடம் கொடுப்போம் அவர் பத்திரிக்கையில் வெளியிட உதவி செய்வார் என்றான். ஜீவா நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தான், நான் நாளைக்கு எங்களுக்கு நடந்தவற்றையே கதையாக எழுதுகிறேன். திங்கட்கிழமை காலையில் நாம் இருவரும் அந்த பத்திரிக்கை ஆசிரியரை நேரில் சந்தித்து கதையை கொடுத்து பத்திரிக்கையில் வெளியிட உதவி கேட்போம் என்றேன். சரி ரமேஷ் மறக்காமல் தீர்வுடன் கதை எழுது என்று அக்கறையோடு சொன்னான் ஜீவா. கண்டிப்பா நீ சொன்ன தீர்வை தான் எழுதுவேன் ஜீவா, சரி வா ரமேஷ் விமலாவிடம் இதை தெரிவிப்போம் அப்போதான் அவள் மனது நிம்மதி அடையும் என்றான் ஜீவா.
விமலாவிடம் நானும், ஜீவாவும் கதை எழுதுவதை பற்றி கூறினோம், அவளும் அதற்க்கு சம்மதம் தெரிவித்தாள். கதை தயார் படுத்துமாறு கூறிவிட்டு சென்றான் ஜீவா.

நான் கதை எழுத தயார் ஆனேன், ஞாயிற்றுக்கிழமை மதியம் கதை எழுதி முடித்து விட்டேன். விமலாவிடம் கதையை காண்பித்தேன் அவள் படித்துவிட்டு நன்றாக வந்துள்ளது என்று கண்ணீர் விட்டால். பிறகு ஜீவா விட்டிற்கு சென்று கதையை காண்பித்தேன், ஜீவாவும் படித்துவிட்டு நன்றாக வந்துள்ளது என்றான்.

பிறகு திங்கட்கிழமை கலையில் இருவரும் சென்று பத்திரிக்கை ஆசிரியரை சந்தித்து கதையை காண்பித்தோம், அவர் படித்துவிட்டு கண்டிப்பாக அடுத்த வாரம் பத்திரிகையில் உங்கள் கதை வரும் என்றார் அவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு இருவரும் வெளியே வந்தோம். வெளியே வந்தவுடன் ரமேஷ் அடுத்த வாரம் பத்திரிகையில் உன் கதை வெளிவரும் பிறகு முடிவு மக்கள் கையில் நம்பிக்கையுடம் காத்திரிப்போம் என்றான் ஜீவா. பிறகு இருவரும் அலுவலகத்துக்கு சென்றோம்.

பத்திரிகை ஆசிரியர் கூறியது போலவே அடுத்த வாரத்தில் கதை பத்திரிகையில் வெளியானது, மக்கள் இப்பிரச்சனையை கையில் எடுப்பார்கள், அதன் மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாலூட்டும் அறை அமைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். 

.....முற்றும்.....  


-சதீஸ் கார்க்கி                            

Sunday, 22 February 2015

கழிப்பறை வசதியற்ற அரசாங்க மகளிர் கல்விநிலையங்கள்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு இந்திய முழுவதும் உள்ள அரசாங்கங்கப் பள்ளிகளின் கழிப்பிட வசதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வின் படி தேசத்தில் உள்ள 1,01,443 பெண்கள் பள்ளிகள் கழிப்பறை வசதியாற்றவையாகவும், கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் 87,984 மகளிர் பள்ளிகள் உள்ளன. இந்த ஆய்வின் அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகார்பபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரம் அடைந்த பின் கடந்த 67 ஆண்டுகளில் கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும் கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன. இதில் தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். இந்த ஆய்வின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது .
வரிசை எண்
யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள் பெயர்
கழிவறை இல்லாத பெண்கள்  பள்ளிகளின் எண்ணிக்கை
செயல்படாத கழிவறை கொண்ட பெண்கள்  பள்ளிகளின் எண்ணிக்கை
1
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்
23
10
2
ஆந்திரப் பிரதேசம்
9114
8329
3
அருணாசலப் பிரதேசம்
871
960
4
அசாம்
6890
3956
5
பீகார்
17982
9225
6
சண்டிகர்
0
0
7
சத்தீஸ்கர்
2753
3667
8
தாத்ரா நாகர் ஹவேலி
14
12
9
டாமன் டையூ
0
0
10
தில்லி
0
0
11
கோவா
22
31
12
குஜராத்
87
80
13
ஹரியானா
380
156
14
இமாசலப் பிரதேசம்
460
46
15
ஜம்மு & காஷ்மீர்
6294
2797
16
ஜார்க்கண்ட்
4736
3979
17
கர்நாடக
12
30
18
கேரளா
82
62
19
லட்சத்தீவுகள்
0
0
20
மத்தியப் பிரதேசம்
9130
9271
21
மகாராஷ்டிரா
1226
2190
22
மணிப்பூர்
67
487
23
மேகாலயா
3781
1063
24
மிசோரம்
6
402
25
நாகாலாந்து
96
254
26
ஒடிசா
8196
12520
27
பாண்டிச்சேரி
0
0
28
பஞ்சாப்
544
372
29
ராஜஸ்தான்
2224
2990
30
சிக்கிம்
8
24
31
தமிழ்நாடு
1442
958
32
தெலுங்கானா
7945
7881
33
திரிபுரா
352
169
34
உத்தரப் பிரதேசம்
2355
5971
35
உத்தராஞ்சல்
743
1005
36
மேற்கு வங்கம்
13608
9087
மொத்தம்
1,01,443
87,984
          மொத்தம்
1,89,427
(கழிப்பறை வசதியற்ற, செயல்படாத கழிவறை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை)

இதனை நாம் வேறொரு கோணத்தில் உதாரணத்தோடு அணுகுவோம். கழிப்பறை வசதி இல்லாமல்,பயன்படுத்த முடியாத நிலையில் 1,89,427 அரசாங்க (பெண்கள்) பள்ளிகள் இயங்கிகொண்டிருகின்றன என்பதனை நினைவில் கொள்க. உதரணமாக 1,89,427 பள்ளிகளிலும் தலா 100 பெண்கள் கல்வி கற்கின்றனர் என்றால் ஒட்டுமொத்த மாணவிகளின் எண்ணிக்கை 1,89,42,700 ஆக இருக்கும். உதரணமாக 1,89,427 பள்ளிகளிலும் தலா 5 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 9,47,135 ஆக இருக்கும்.இதனை சரியாக குறிப்பிட வேண்டும் என்றால் 1,89,42,700 மாணவிகள், 9,47,135 ஆசிரியர்கள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்,. இந்த எண்ணிக்கையில் மாற்றுதிரனாளி மாணவிகளும், கர்ப்பிணி ஆசிரியர்களும் அடங்கும். இத்தகைய பள்ளிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள், இதர பணியாளர்களின் எண்ணிக்கையை சேர்த்து கொண்டால் அதன் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள்  பெரும்பாலும் பள்ளிசுவர்களின் பின்புறம், மரங்களின் மறைவில்,புதர்களின் மறைவில்/ பின்புறம் தான் உடல் உபாதைகளை (சிறுநீர்,மலம்) கழிக்கிறார்கள். தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் இவ்விடம் கொசுக்களுக்கும், சிறு புச்சிகளுக்கும் இருப்பிடமாக மாறுகிறது. மேலும் இவ்விடத்திற்கு உடல் உபாதைகளை கழிக்க வரும் மாணவிகள், ஆசிரியர்களை கொசு, இதர புச்சிகள் கடிக்கின்றன, இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. தொடர்ந்து இத்தகைய இடங்களில் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது, கழிவுகளை மிதித்து வகுப்பறைக்கு செல்வதானால் பள்ளி வளாகம் சுகதரமற்ற நிலையில் இருக்கிறது(இயங்குகிறது).

மறைவான இடங்கள் இல்லாத, பள்ளியை சுற்றிலும் கட்டிடங்கள் இருக்கின்ற பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க வழியில்லாமல் அதனை கட்டுபடுத்தி கொள்கின்றனர். இதனை நாம் வேறொரு கோணத்தில் கவனிப்போம். பெரும்பாலான பள்ளிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை  4.30 மணிக்கு நிறைவுபெறுகிறது. காலை 8.30 மணிக்கு பள்ளி தொடங்குகிறது என்றால் 7.30 மணிக்கே விட்டிலிருந்து மாணவிகள், ஆசிரியர்கள் புறப்படுகிறார்கள், இவ்வாறே 4.30 மணிக்கு பள்ளி நிறைவடைந்த பிறகு விட்டிற்கு வந்து சேர மணி 5.30 ஆகிறது. காலை 7.30 மணியுலிருந்து மாலை 5.30 மணி வரை(10 மணி நேரம்) மாணவிகள்/ஆசிரியர்கள் உடல் உபாதைகளை கழிக்க செல்லாமல் தொடர்ந்து (தினத்தோறும்) கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் சிறுநீரகத்தில் கல் தோன்றுகிறது. (வேறு சில உடல்ரிதியான பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள்)

அரசாங்க பள்ளிகளின் நிலைமையை போலவே சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும் கழிப்பறைகள் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது, இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளும், பணியாற்றும் ஆசிரியர்களும் மறைவான இடத்தில தான் உடல் உபாதைகளை கழிக்கிறார்கள். இக்கல்லூரியில் மொத்தம் 4,300க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கின்றனர், காவலராக, இதர பணியாளராக ஆண்கள் பணிபுரிகிறார்கள். ஆண்களும் உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடத்தையே நாடுகிறார்கள். இவ்வாறு மறைவான இடத்தில பெண்கள் உடல் உபாதைகளை கழிக்கும்பொழுது ஆண்களின் குரலோ, காலடி சத்தமோ கேற்க்கும் பட்சத்தில் அப்பெண்கள் அடையும் பயத்தையும், மன வேதனையும் விவரிக்க இயலாத துயரத்தை அடைகிறார்கள்.
 மாதவிடாய் காலங்களில் (காயிதே மில்லத் கல்லூரி, 1,89,427 பள்ளிகள்) மாணவிகள், ஆசிரியர்கள் உடை மாற்றிக்கொள்ளவோ, தூய்மைபடுத்திக் கொள்ளவோ வசதிகள் இல்லாமல் அவதிப் படுகிறார்கள்.குளிர் காலங்களில் வெட்பநிலை மாற்றத்தால் உடல் உபாதை அதிகமாக வெளியேற்றப்படும், உடல் உபாதைகளை கழிக்க முடியாமல் இக்காலங்களில்(குளிர்) மாணவிகள், ஆசிரியர்கள் மிகவும் அவதிப் படுகிறார்கள்.

மழைக்காலங்களில் மாணவிகள், ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உடல் உபாதைகளை கழிக்க மறைவான இடங்களுக்கு செல்லமுடியாமல் தவிக்கிறார்கள். இத்தகைய இடங்களில் கழிக்கப்படும் உடல் உபாதைகள் மழைநீருடன் கலந்து வளாகத்துக்குள் தேங்கி நிற்கிறது, இதனால் பள்ளி,கல்லூரி வளாகம் மாசடைகிறது. மேலும் இவ்வாறு தேங்கும் மாசடைந்த தண்ணீரில் வசிக்கும் கொசுக்களின் முலம் (டெங்கு)காய்ச்சல் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரவுகிறது

இத்தகைய வேதனைகளை சுமந்து கொண்டு மாணவிகளால் எவ்வாறு முழுமனதுடன் கல்வி கற்க இயலும்?, ஆசிரியர்களால் எவ்வாறு சிறப்பாக பண்ணியாற்ற இயலும்?

-சதீஸ் கார்க்கி.

ஆதாரம்: